ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட குரல் பதிவுகள், அனுமதி பத்திரமற்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை குரல் பரிசோதனைக்காக தமது திணைக்களத்திற்கு அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த குரல் பதிவுகள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, கடந்த 9 ஆம் திகதி அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.

இதற்கமைய அது குறித்த அறிக்கையை துரிதமாக எதிர்பார்ப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநயாக்கவிடம் இருந்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள குரல் பதிவுகள், குற்றத்தடுப்பு பிரிவினாலும் அனுமதி பத்திரமற்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் துப்பாக்கி பிரிவின் ஊடாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.

குரல் பதிவுகள் குறித்த நபர்களுடையதா? என உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதி பத்திரமற்ற துப்பாக்கி, குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள், மடிக்கணினி, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

நுகேகொடை நீதவான் எச்.யூ.கே.பெல்பொல கடந்த 8 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யவதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது, காவல்துறையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் காவல்துறைமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தென்னகோணுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. அத்துடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது. பலத்த மழை காரணமாக விமான ஓடுபாதைகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Spread […]

Subscribe US Now

error: Content is protected !!