மரண தண்டனை நிறைவேற்ற தடை நீடிப்பு

colourmedia

இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு இன்று (29) நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை இடைக்கால தடையை நீடித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஜூலை மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

வசந்தவின் பதவிகள் பறிப்பு

வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன் அறிவித்துள்ளார். அண்மையில், எதிர்கால அரசில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உண்மையா என்றும் ரவி கருணாநாயக்க, ரிஷாட் பதியுதீன், […]

Subscribe US Now

error: Content is protected !!