சுதந்திரக் கட்சியை மீட்கும் அணி உருவானது

colourmedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுக்கும் அணியொன்று இன்று (25) சற்று முன்னர் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த அணி செயற்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஒரியண்ட் ஹோட்டலில் இன்று இது தொடர்பான மாநாடு இடம்பெற்றது. இதன்போது குமார வெல்கம எம்பி மற்றும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் அதாவுத செனவிரத்ன, முன்னாள் கடுவெல முதல்வர் புத்ததாச உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவடையும் நிலைமை ஏற்படும் என்பதால் அதனை தடுத்து நிறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டுமென இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நவம்பர் ஐந்தாம் திகதி பொதுக் கூட்டமொன்றை சுகததாஸ உள்ளரங்கில் நடத்துவதற்கும் அன்றைய தினம் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை

இம்முறை தீபாவளி (27) ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறுநாள் (28) திங்கட்கிழமை அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தின வகுப்புக்களை பிறிதொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Spread the love45            45Shares45SharesFacebook Comments

Subscribe US Now

error: Content is protected !!