சஜித், கோட்ட, அநுர இன்று ஒரே மேடையில்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே மேடையில் நாட்டு மக்களுக்கு தமது கொள்கைகளை இன்று விளக்கமளிக்கவுள்ளனர்.

பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான வேட்பாளர்கள் மூவரும் இங்கு உரையாற்றுவதாக பெப்ரல் அமைப்புக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.

இதுதொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சியிடம் கருத்து வெளியிடுகையில்,நாட்டின் சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்ய மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக இதற்கான ஏற்பாடுகளை பெப்ரல் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.

இதுவரைக்காலமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தமது கொள்கைகளை நாட்டு மக்களுக்குத் தெளிவுப்படுத்தியதில்லை. இம்முறை அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளோம்.போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அனைவரும் ஒரே மேடைக்கு கொண்டுவர வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாக இருந்த போதிலும், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதுள்ளது.

குறிப்பாக கடந்த தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய அனைத்து வேட்பாளர்களும் இணைந்து 138000 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அதன் காரணமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு மாத்திரம் ஒரே மேடைக்கு அழைப்பதென எமது குழு தீர்மானித்தது.

இன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மக்களால் வழங்கப்பட்ட கேள்விகளே வேட்பாளர்களிடம் கேட்கப்படவுள்ளன. இந்நிகழ்வை நாட்டின் அனைத்து மக்களும் தொலைக்கட்சிகளில் பார்வையிட முடியும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிப்பரப்பப்படும்.

ஆகவே, இந்நிகழ்வை அனைவரும் பார்வையிட்டு நாட்டின் தலைவராக யார் வரவேண்டுமென்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்புணர்வுப்படுத்தும் பணிகளை பெப்ரல் அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி அவர்களின் “இலங்கையில் பாரதி ஆய்வு நூல் வெளியீ விழா நீர்கொழும்பில் இடம்பெற்றது.

படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி அவர்கள் எழுதிய “இலங்கையில் பாரதி” ஆய்வு நூல் வெளியிட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் பொ.ஜெயராமன் அவர்களின் தலைமையில் நீர்கொழுப்பு இந்து இளைஞர் மன்ற கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீர்கொழும்பு தமிழ் சமூகத்தை சேர்ந்த பலமுக்கியஸ்தர்களும், ஆசிரியர்களும், கலை, இலக்கிய அன்பர்கள் மற்றும் தமிழ் […]

Subscribe US Now

error: Content is protected !!