update-நீர்கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள்,விளையாட்டுபோட்டிகள,ஒன்றுகூடல்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அறவிடப்படும் பணத்திற்கு 10% வரி அறவிட நீர்கொழும்பு மாநகரசபை தீர்மானம்.

நீர்கொழும்பு மாநகர சபையின் 2018ஆம் ஆண்டிற்க்கான டிசம்பர் மாத பொது சபை கூட்டம்  நேற்றைய தினம்(11) மு.ப 10.00 மணிக்கு சபை கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ஆவணம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்போது நீர்கொழும்பு மாநகர சபை முதலவர் தயான் லான்ச அவர்களால் ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

நீர்கொழும்பு மாநகரசபை எல்லை பிரதேசத்தில்(நீர்கொழும்பில் அனைத்து பகுதிகளிலும்,சுற்றுலா ஓட்டல்களிலும்)  நடைபெறும் நடனநிகழ்ச்சிகள், விளையாட்டுபோட்டிகள், விளையாட்டுநிகழ்ச்சிகள், சினிமா காட்சிகள் இசைநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக வசூலிக்கப்படும் பணத்தில் (கலந்துகொள்பவர்களிடம் எவ் வழியினுடகவேனும் பணம் வசூலிக்கப்பட்டால்) வரி  அறவிடப்பட வேண்டுமெனவும் மற்றும் நுழைவுப்பத்திரத்தில் 5% இல் இருந்து 25%எனும் விகிதாசாரத்தில் வரி அறவிடப்பட  முடியும் என கேளிக்கை வரி சட்டமூலத்தில் சட்ட திட்டங்கள் காணப்படுவதினால். வருவாய் பரிசோதகர் மூலம் பெறப்பட்ட விரிவான அறிக்கையின் படி மிகவும் திறமான முறையில் வரி  அறவிடுவதற்க்காக சபை தீர்மானம் எடுக்கவேண்டுமெனவும் அதன்படி 10% சதவீதமாக அரசின் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவது தகுந்தது என சபைமுதலவர் தயான் லான்ச   தெரிவித்தார்.

இவ் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்த நீர்கொழும்பு மாநகர சபையின் மக்கள் விடுதலைமுன்னணி உறுப்பினர் காமினி பெர்னாண்டோ அவர்கள் மக்கள் தங்கள் பொழுதுபோக்கை கழிக்கும் சுதந்திரத்துக்காக மக்கள் மீது வரி சுமை சுமத்த கூடாது என்று  தெரிவித்தார் மேலும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக இவ் ஆலோசனையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

தொடந்து உரையாற்றிய நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கியான்  பர்னாந்து அவர்கள் நீர்கொழும்பு மாநகர சபை மூலமாக நீர்கொழும்பு பகுதியில் அதிகமான அபிவிருத்திகள் செய்வதற்கும், சேவைகள் செய்வதற்கும் அதிகமான பணத்தேவை உள்ளதால்  இது சிறந்த திட்டமெனவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இவ் ஆலோசனையை ஆதரிப்பதாகவும் ஆனால்  இத்திட்டம் நீதியான சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தெரிவித்தார்.

இத்  திட்டமானது எதிர்வரு வெள்ளிக்கிழமை(14)  நீர்கொழும்பு மாநகர சபையின்  2019 ஆம் ஆண்டு வரவு செலவு வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்டதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

காணொளி(video)

நீர்கொழும்பு மாநகர சபையின்   வரவு செலவு திட்ட  செய்திகள் தொடரும்….     

Spread the love
  • 45
  •  
  •  
  •  
  •  
  •   
  •   
  •   
  •  
  •  
    45
    Shares
  • 45
    Shares

Facebook Comments

Next Post

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

இந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்த வருடம் ஆறாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் பிரபல பாடசாலைகளுக்காக தீர்மானிக்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியமைச்சால் இன்றைய தினம் இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு, றோயல் கல்லூரி – 187 புனித சில்வெஸ்டர் கல்லூரி […]

You May Like

Subscribe US Now

error: Content is protected !!