நீர்கொழும்பு கடற்கரை வீதியில் தொடரும் திருடர்கள் கைவரிசை!

colourmedia

அண்மைக்காலமாக நீர்கொழும்பு கடற்கரை வீதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது .

இன்றய தினம்(20) அதிகாலை நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல  திரைப்பட இறுவட்டு கடை(movie dvd,cd shop) ஒன்று உடைத்து ஒருதொகை பணமும்,தொலைபேசி அட்டைகள்,மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த புதிய இலத்திரனியல் கருவிகள் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடை உரிமையாளர் இச் சம்பவம் தொடர்பாக  கருத்து தெரிவிக்கையில் கொள்ளையிடப்பட்டுள்ள பணம் உட்பட அனைத்து பொருட்களின் பெறுமதி சுமார் இரண்டரை இலட்சம் இருக்கும்  என்று தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த  சிலநாட்களுக்கு முன் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள மூன்று ஆலயங்களில் உண்டியல்கள் உடைத்து பணம் கொள்ளையிட பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இப் பிரதசத்தில் வாழும் பொது மக்கள் மிக அவதானமாக இருக்கும் படி எமது ஊடகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் .     

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

நீர்கொழும்பு அரச வங்கிகளில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டதிற்கு விஷேட கரும பீடங்கள் திறந்து வைப்பு

அரசாங்கத்தின் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்திக்கான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது . இவ் வேலை திட்டத்துக்காக நீர்கொழும்பு அரசவங்கிகளில்  விஷேட கரும பீடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு  அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி,தேசிய சேமிப்பு வங்கி,பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் நேற்றைய(20) தினம்  […]

Subscribe US Now

error: Content is protected !!