க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் விரைவில் – பரீட்சை திணைக்களம்

colourmedia

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதி அட்டைகள் விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் திகதி நடைபெறவுள்ள தரம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான அனுமதி அட்டைகளை அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இந்த இரண்டு பரீட்சைகள் சார்ந்த மேலதிக வகுப்புக்களை ஐந்து தினங்களுக்கு முன்னதாக நிறுத்த வேண்டியது அவசியம். இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய வினாத்தாள்களை வாசித்துப் புரிந்துகொள்ள மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக 10 நிமிடம் அவகாசம் வழங்கப்படுமென்றும் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித்த மேலும் குறிப்பிட்டார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

ஜனாதிபதியும் தாய்லாந்து பிரதமரும் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா அவர்களும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இன்று(13)முற்பகல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலதா மாளிகையில் உள்ள […]

Subscribe US Now

error: Content is protected !!