தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

colourmedia

தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம’பமாகிறது.

இந்த மாநாடு நாளையும் இடம்பெறும்.

நிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு பிரதான உரை நிகழ்த்துவார். சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்துவார். மாநாட்டு அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும். பங்களாதேஷிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற முதலாம் இரண்டாம் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிகள் குறித்தும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும். ஆப்கானிஸ்தான்இ பங்களாதேஷ்இ பூட்டான்இ இந்தியாஇ மாலைதீவுஇ மியன்மார்இ நேபாளம்இ பாகிஸ்தான்இ இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்கள். அனைத்துப் பாராளுமன்ற சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

கடந்த மூன்றரை வருட காலமாக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – ஜனாதிபதி

செய்தி ஜனாதிபதி ஊடகம்  அரசியல் எதிராளிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போதிலும் தற்போது நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் பொற்காலமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். விவசாயிகளின் நீண்ட கால நீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் அவர்களது பல பிரச்சினைகளை தீர்க்கவும் கடந்த மூன்றரை வருட காலமாக அரசாங்கம் முறையாக திட்டமிட்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது […]

Subscribe US Now

error: Content is protected !!