துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு

colourmedia

இன்று (09) காலை 8.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது பழக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே மோட்டார் சைக்களில் வந்த ஆயுததாரியொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நேற்று புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் நவோதயா கிருஷ்ணா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் CCTV பதிவுகள்.

Posted by Selvah நண்பேண்டா on Tuesday, 10 July 2018

 

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

நீர்கொழும்பில் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வது போன்று நடித்து திருடி விற்பனை செய்த நபர் கைது: 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

மோட்டார் சைக்கிள் விற்பனை தொடர்பான இணையத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களை பார்வையிட்டு விளம்பரங்களை வெளியிட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வது போன்று நடித்து ஏமாற்றி அந்த மோட்டார் சைக்கிள்களை கடத்திச் சென்று விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த சட்டத்தை […]

Subscribe US Now

error: Content is protected !!