புதிய வரைபடத்தை இம்மாதம் முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்

colourmedia

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய 1: 500 என்ற புதிய வரைபடத்தை இம்மாதம் 15ம் திகதி முதல் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று நில அளவைகள் ஆணையாளர் நாயகம் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்தார்.

இந்த வரைபடத்தை அன்றைய தினம் முதல் நில அளவையாளர் திணைக்களத்தின் நாரஹென்பிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அல்லது மாவட்ட அலுவலகங்களில் 150 ரூபாவைச் செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற கொழும்பு துறைமுக நகரத்தின் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான அளவீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது வர்த்தமானியில் வெளியான பின்னர் இதற்கான சட்டரீதியான அந்தஸ்தை இலங்கை பெற்றுக்கொளளும்.

இலங்கையில் மண்போட்டு நிரப்பப்பட்ட பின்னர் கொழும்பு துறைமுக நகரப் பகுதி இரண்டு தசம் 6 கிலோ மீற்றர் நிலத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது இலங்கை நிலப்பகுதியுடன் ஒன்றிணைக்கப்படும். இந்தப் புதிய நிலப்பரப்புடன் இலங்கையின் நிலப்பரப்பு 60 ஆயிரத்து 612 தசம் ஒன்பது ஒன்பது சதுர கிலோ மீற்றர் ஆகும் என்றும் நில அளவைகள் ஆணையாளர் நாயகம் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்தார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்

கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதனடிப்படையில் கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. உலக வங்கி, இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்திற்காக 321 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையில் உலக வங்கி 213 […]

Subscribe US Now

error: Content is protected !!