மூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸ் காண்ஸ்டபிளின் சடலம் மீட்பு

colourmedia

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பொலிஸ் காண்ஸ்டபிள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(25) மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை காப்பாற்ற நீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும் போது குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NEWS UPDATE:- உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

மழையுடனான கால நிலை நீடிக்கக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான கால நிலை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் […]

Subscribe US Now

error: Content is protected !!