உலகின் சிறந்த 18 ரயில் பயணங்கள் பட்டியலில் யாழ்தேவி

colourmedia

லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ (The Guardian) இணையத்தளம் உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது.

குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் ஆசியா கண்டத்தில் இலங்கையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.

ரயில் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி ரயில் இலங்கையின் வடக்கு மற்றும் தென் பகுதியை கலை, பண்பாடு, வர்த்தகம் என பலதரப்பட்ட வகைகளில் ஒன்றிணைக்கின்றது. இப்பட்டியலில் இந்தியாவின் நீலகிரி மலை ரயிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வாழ்த்துக்கள்

 

Spread the love
 • 45
 •  
 •  
 •  
 •  
 •   
 •   
 •   
 •  
 •  
  45
  Shares
 • 45
  Shares

Facebook Comments

Next Post

இராணுவ சேவையில் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை இராணுவத்திற்கு தகுதி பெற்ற வைத்திய அதிகாரிகள், மருத்துவ ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கு தகுதி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலாறும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பம் இம்மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. வைத்திய அதிகாரிகள், மருத்துவ ஆலோசகர்கள், பல் […]

Subscribe US Now

error: Content is protected !!